Showing posts with label FRUITS. Show all posts
Showing posts with label FRUITS. Show all posts

Saturday, 26 October 2019

இதயத்துக்கு வலுசேர்க்கும் உணவு வகைகள்.!

By TNPSCGK Editorial Team | At October 26, 2019 | Label : , | 0 Comments



கீரைகளில் இதயபலத்துக்கு உதவும் சத்துக்கள் உள்ளன. எனவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது.

முழுதானியங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலு சேர்க்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

ஓட்ஸில் நார்ச்சத்துகள் மிகுந்துள்ளன. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த ஒட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது.ஆப்பிள் இதயத்துக்கு மிகவும் நல்லது. இது இரத்தம் உறைவதைத் தடுக்கும்.


பாதாம் எண்ணெய்யில் விட்டமின் "இ' உள்ளது. இது உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைக்கும். இதயநோய் அண்டாமல் தடுக்கும்.

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜுஸ் குடிப்பது இதய நோய் வராமல் நம்மை காப்பாற்றும்.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, மல்பெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு விட்டமின்"சி' கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. தினமும் காலையில் ஓட்ஸூடன் ப்ளுபெர்ரி பழம் சாப்பிட இதயம் சீராக இயங்கும்.

சோயா உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயநோய் வருவதைத் தடுக்கிறது. பாலுக்கு பதில் சோயா பாலை காலையில் அருந்தலாம். இதயம்
வலுப்பெறும்.

உப்பு இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும் போதெல்லாம் இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.


Tuesday, 22 October 2019

பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா? fat loss fruits in tamil

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , , | 0 Comments

 ஆம்! பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.
            காலை   உணவு  சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C  நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.

1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள் 

3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்  
8. தக்காளி 
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12.  மாம்பழம்
13. சப்போட்டா

  மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால்  உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும்  பயன்படுகிறது.

Saturday, 5 October 2019

ஆரஞ்சு பழத்தின் இவ்வளவு மருத்துவ குணங்களா???

By TNPSCGK Editorial Team | At October 05, 2019 | Label : , | 0 Comments
 





ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின்கள்?

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.
பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.  ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் C. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். 
உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.




ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். நாம் உண்ணும் ஆரஞ்சுப் பழத்தைதில் A,B,C ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும். ஆரஞ்சில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.

முகத்தை அழகாக்க? 

ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

குடல் சுத்தமாக? 

தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். முக்கியமாக அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும் ஆற்றல் இந்த ஆரஞ்சுப் பழச்சாறுக்கு உண்டு. ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும் போது ஆரஞ்சு பழச்சாற்றை குடிப்பதன் மூலம் பேதி நின்று உடனே சரியாகும். மேலும் சளி, காசநோய், தொண்டைப்புண் மற்றும் ஆஸ்துமா,  முதலியவை குணமாகும். அதுமட்டும் அல்லாமல்  இதய நோய்,நெஞ்சுவலி மற்றும் எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு பழம்.

முடியாதவர்களுக்கு உகந்த உணவு? 





நோய்வாய் பட்டவர்கள் படுக்கையில் இருக்கும்போது அவர்களுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தவிர்க்க  முயற்சிப்பார்கள். உணவே உதுக்கும் காரணத்தால், உடல் நலம் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத் தவிர்க்க தான் மருத்துவர்கள் அடிக்கடி நோயாளிகளுக்கு சற்று தெம்பு ஏற்பட ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கச் சொல்வார்கள். ஏன் என்றால்  நோய்வாய் பட்டவர்களுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு நன்கு ருசிக்கும் என்பதால் தான்.

தாய்ப்பாலுக்கு ஈடாக? 

தற்போது வளர்ந்து வரும் தலைமுறை சரியான ஊட்டச்சத்து மற்றும் சரியான உணவு முறை இல்லாததால் தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும். தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அற்புதமான உணவாகப் பயன்படுகிறது. ஆனால், கைக்குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாற்றை கொடுக்கும் போது பாதிக்கு பாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். 1 வயதுக்கு மேல் உள்ள  குழந்தைகளுக்குத் தனித்த சாறாகவே கொடுக்காலம் அல்லது பழத்தை உரித்துக் கொடுத்து  குழந்தைகளை உண்ணச் சொல்லலாம்.

நிம்மதியான தூக்கத்திற்கு? 

இன்றைய வேகமான காலகட்டத்தில் சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் தூங்கச் செல்லும்முன் 100 மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.
சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.

குழந்தை வளர்ச்சிக்கு?

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

மெலிந்த உடல் பலமடைய?

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.
இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.
இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.




பெண்களுக்கு ஏற்றது? 

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்

பல் உறுதியாக? 

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
1. தலைவலி, காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்
 
2. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.
3. பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. அதை ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.
4. தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.
5. டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது ஆரஞ்சு ஜூஸ்.
6. பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.
7. டிஸ்பெப்ஸியா எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.
8. ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.
9. மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.
10. இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.

முடிவுரை! 

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த ஆரஞ்சுப்பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியம் பெறுவோம். இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்

என்றும் இளமையோடு, அழகா இருக்கணுமா? இத படிங்க முதல்ல?

By TNPSCGK Editorial Team | At October 05, 2019 | Label : , | 0 Comments
மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனி. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது.




மாதுளையின் வகைகள்:

மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. பிடானா, ஆலந்தி, கண்டதாரி, மஸ்கட் ரெட்,  ஸ்பேனிஷ் ரூபி, காபூல், தோல்கா மற்றும் வெள்ளோடு போன்றவை மாதுளைப் பழ வகைகளின் பெயர்கள் ஆகும்.

பழங்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் குறிப்பக ஒரு சில பழங்களில் உள்ள நன்மைகள் அளவிட முடியாதவை. இவ்வாறு அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள பழ வகைகளில் மாதுளம் பழத்திற்கு என்று ஒரு தனி இடமே உள்ளது.

 இப்பழத்தைப் பெரியோர் முதல் சிறு குழந்தைகள்வரை அனைவரும் விரும்புகின்றனர்.

மாதுளம் பழத்தின்  பொதுவாகவே இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. மேலும் மாதுளை மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது.


மாதுளை பழத்தின் 25 வகையான மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:





1. தோல் அழற்சி பிரச்சனையிலிருந்து விடுதலை
 2. உலர் சரும பிரச்சனைக்குத் தீர்வு
3. பாக்டீரியா எதிர்ப்பு
4. வயதான தோற்றத்திற்கான எதிர்ப்பு
5. உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் அதிகமுள்ள பழம் மாதுளை பழம்
6. இயற்கையான முகத் தேய்ப்பான்
7. சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
8. மாதுளை பழத்தின் மூலம் மென்மையான சருமம்
9. காயங்களை ஆற்றுதல்
10. முகப்பரு பிரச்சினைக்குத் தீர்வு
11. நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.
12. மாதுளையின் கூந்தலுக்கான பலன்களை அள்ளி தருகிறது.
13. முடிவளர்ச்சி மற்றும் உறுதிக்கான வைட்டமின்கள் அடங்கியுள்ளது.
14. முடி நுண்குமிழை வலிமைப்படுத்துகிறது:
15. இள நரைக்குத் சிறந்த தீர்வு
16. பொடுகு மற்றும் பூஞ்சை தொல்லைக்குத் தீர்வு
17. அழற்சி மற்றும் வலுக்கைத் தலைக்குத் தீர்வு
18. துத்தநாகம் ஊட்டச்சத்து கிடைக்கிறது
19.மாதுளையில் வைட்டமின் ‘சி’ உள்ளது
20. மாதுளையில் இரும்புச் சத்து உள்ளது
21. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
22. மார்பகப் புற்றுநோய்க்குத் தீர்வு
23. நினைவாற்றலை பெருக்க மாதுளை பெரும் பங்கு வகிக்கிறது.
24. வயிறு குளாறுகளுக்கு ஏற்றது மாதுளை
25. பெண்களுக்கு அருமருந்து மாதுளை

மாதுளம்பழத்தின் பயன்கள்:-

1. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க:-


  • உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்  முக்கியமான வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், துல்லியமாகவும் அதிக அளவில் அழிக்கும் ஆற்றல் மாதுளம்பழத்தில் உள்ளது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும், நமது உடலுக்கு சக்தியும் அளிப்பதில் மாதுளை ஒரு நல்ல பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நமது இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது என்பது குறிபிடித்தக்கது. மேலும் பித்தத்தைப் போக்கும் ஆற்றல் மாதுளையில் உள்ளது. முக்கியமாக இருமலை நிறுத்துகிறது.
  • புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. 
  • குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
  • மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால், அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து, நாம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. எந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது.

2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:-

  • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.
  • மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். 
  • மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.




3. ஆண்மை அதிகரிக்க:-

  • மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். 
  • பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.
  • தொடர்ந்து நோய் வாய் பட்டவர்கள் அவர்களின் நோயின் பாதிப்பால் அவர்களின் உடல்நிலை பலகீனம் அடையும் ஆகவே மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் நன்கு தேறும், மேலும் உடல் எடை கூடும். 
  • குடல், தொண்டை மற்றும் மார்பகங்கள் நுரையீரலில்  அதிகமான ஏற்படும் வலியை சரி செய்யவும். 
  • இன்றைய காலத்தில் உள்ள துரித உணவு(FAST FOOD HABBIT) பழக்கத்தால் ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர் அவர்கள்  மாதுளம்பழம் சாப்பிடுவதால் அதிக சக்தியை பெற முடிகிறது.

4. இதய வலி நிற்க:-

மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.

5. வயிற்றுப் புண்கள் குணமாக:-

மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

6. பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக:-

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.

7. இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க:-

மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.

கற்பிணி பெண்கள் தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் குழந்தை நல்ல சிகப்பாக பிறக்குமாம்! குங்கும பூ வை விட அருமையான பயன் கிடைக்கும்


மாதுளையில் உள்ள ‘எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

மாதுளைப் பழத்தில் உயிர்வளி ஏற்ற எதிர்ப்பொருளான எல்லாஜிட்டனின் (Ellagitannin) உள்ளது. இந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்குக் காரணமான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்கிறது. மேலும் ஈஸ்ட்ரோஜன் உருவாகுவதற்குப் பயன்படும் அரோமடேசைத் (Aromatase) தடுக்கிறது. இதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபயாத்தைக் குறைக்கிறது.

8. வயிறு குளாறுகளுக்கு ஏற்றது மாதுளை:-  


புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது.

மாதுளம் பழத்தின் விதைகளைச் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தவிருத்தி அதிகரிக்கும். குறிப்பாக மாதுளம் பழம் சீதபேதிக்குச் மாதுளம் ஒரு சிறந்த நிவாரணம் அளிக்கும் திறன் கொண்டது. மேலும் இதில் கொழுப்பு, மாவு, புரதம், தாதுப் பொருள் போன்ற எண்ணில் அடங்காத சத்துகள் அடங்கியிருக்கின்றன.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளைக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் மாதுளம் பழத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து விரைவில் குணம் பெறலாம்.

9. பெண்ககளுக்கு ஏற்றது:- 

திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன்  குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும் சக்தி கொண்டது; மேலும் எலும்புகள் வலுப்பெற உதவும்.

மாதுளைப் பழச்சாறு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி  இரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.

மாதுளையின் விதைக்குச் காச ரோகத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், சுக்கிலத்தைப் பெருக்கும் சக்தியும் நீர்க்சுருக்கும் நோய்களைக் குணமாக்கும் தன்மையும் உண்டு. பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மாதுளை மிகவும் சிறந்தது.

மாதுளை சாறு தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

10. நோய் எதிர்ப்புச் சக்தி

மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.  இதயத்திற்கும், மூளைக்கும் இனிப்பு மாதுளம் பழம் அதிகமான சக்தி அளிக்கிறது.

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின்  மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.



மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால்பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.

மாதுளைப்பழச்சாற்றாலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர்காலத்தில் ஏற்படும் மசக்கை மற்றும் வாந்தியை குணப்படுத்தும். உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி குருதி விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.

கடுமையான சீத பேதியால் அவதிப்படுகிறவர்களுக்கு அருமருந்து மாதுளைதான். மாதுளம்பழத்தின் தோல், விதை அல்லது பிஞ்சு.. இதில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் எலுமிச்சை அளவுக்கு எடுத்து எருமை தயிரை மோராக்கி கலந்து குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் ஓடிவிடும்.

முடிவுரை! 

இத்தனை பயன்களைக் கொண்ட இந்த மாதுளம் பழத்தை சாப்பிட்டு, நல்ல ஆரோக்கியமும், பலனும் பெறுவோம்.  ஆக மொத்தம் இந்த பதிவில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான மாதுளம் பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொண்டோம். மேலும் அடுத்த பதிவில் இதன் மாதுளம்பூ, மாதுளம் விதை தெரிந்துகொள்ளலாம். 

Tuesday, 9 July 2019

Healthtipsintamil அனைவராலும் விரும்பி உண்ணப்படும் மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்.!!

By TNPSCGK Editorial Team | At July 09, 2019 | Label : , , | 0 Comments


மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ளது. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.
மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் தீரும்.
கல்கண்டு, பனீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமம் பொலிவுடன் இருக்கும்.
மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தந்து உடலை நலமுடன் வைக்கும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். உடல்நடத்துக்கு அனைத்து நன்மையையும் கிடைக்கும்.

அத்தி என்ற பெயரை கேட்டாலே என்ன ஒரு ஆனந்தம்.! அத்தி பழத்தின் அருமையான நன்மைகள்.!!

By TNPSCGK Editorial Team | At July 09, 2019 | Label : , | 0 Comments
Image result for அத்தி என்ற பெயரை கேட்டாலே என்ன ஒரு ஆனந்தம்.! அத்தி பழத்தின் அருமையான நன்மைகள்.!!
நமது வாழ்வில் பெரும் அங்கம் வகித்த பொருட்களில் மறக்க முடியாத பொருட்களில் ஒன்று அத்திப்பழம். இந்த பழத்தை சிறுவயதில் அல்லது வீட்டில் இருக்கும் சமயத்தில் நமது பெற்றோர் வாங்கி வரும் போது., உடன் பிறந்தவர்களுடன் சண்டையிட்டு., போட்டி போட்டுகொண்டு சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில்., வெளியூரில் பணியாற்றும் நேரத்தில்., பல விதமான உணவுகளை மறந்த நாம் வாழ்ந்து வருகிறோம். மறந்த உணவில் அத்திப்பழத்தை பற்றிய மருத்துவ குணங்களை பற்றி காண்போம். பெரு நகரங்களில் பணியாற்றும் பலர் அத்திப்பழத்தை கடைக்கு சென்று சாறு வகையில் பருகுவது உண்டு.

அத்திப்பழத்தின் மூலமாக உடலுக்கு ஜீரண சக்தி கிடைத்து சுறுசுறுப்பை தரும்.

உடலில் இருக்கும் கரும் பித்தம் பிரச்னையை வியர்வையின் மூலமாக வெளியேற்றி ஈரல் மற்றும் நுரையீரல் பகுதியில் இருக்கும் தேவையற்ற தடுப்புகளை நீக்கி நமது உடலை பாதுகாக்கிறது.

தினமும் இரண்டு அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி., தலை முடியானது நீளமாக வளருகிறது.

மெலிந்த உடலுடன் இருக்கிறேன் என்று வருத்தம் அடைபவர்கள்., தினமும் இரண்டு அத்திப்பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலின் இரத்த உற்பத்தியானது அதிகரித்து., உடலும் பருமனடையும்.

இரவு நேரத்தில் ஐந்து அத்திப்பழங்களை சாப்பிடுவதன் மூலமாக மலச்சிக்கல் பிரச்னையை எளிதில் குணப்படுத்த இயலும்.

மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த அத்திப்பழத்தை வினிகரில் ஒரு வாரத்திற்கு ஊற வைத்து., தினமும் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும்.

அத்திப்பழத்தை சாறாக பிழிந்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்., மூல நோய்யானது எளிதில் குணமாகும். மேலும்., அத்திப்பழத்தின் இலைகளை தூளாக அரைத்து வைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மற்றும் பித்தம் சம்பந்த நோய்கள் குணமடையும்.
Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz