Showing posts with label REDUCE WEIGHT. Show all posts
Showing posts with label REDUCE WEIGHT. Show all posts

Tuesday, 29 October 2019

தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?

By TNPSCGK Editorial Team | At October 29, 2019 | Label : , , | 0 Comments
தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?

'தொப்பை' உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.
தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?
ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத உடலை 'சிலிம்'மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர். பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள்.

இந்த பயிற்சியில் மூச்சை வயிற்றை சுருக்கி உள்ளே இழுப்பதால் 'தொப்பை' என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி 'தொப்பை' உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

மூச்சிப்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் முளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக மிக எளிதானதும், எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

 பயிற்சியின் போது பின்பற்ற வேண்டியவை :

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.



இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக

1. ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்

3. இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மட்டும்

 1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம் வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

நான்காவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.

ஐந்தாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு

சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து, அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும். இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

தினமும் இந்த பயிற்சியினை செய்யும் போது புது தெம்பை உணர்வீர்கள்.
Kollu தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும். arugampul juice தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும். Inji and lemon juice தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. thayir தர்பூசணி தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது. water melon எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும். orange and lemon வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது. avocado பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்.
வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Kollu தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும். arugampul juice தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும். Inji and lemon juice தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. thayir தர்பூசணி தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது. water melon எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும். orange and lemon வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது. avocado பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்
வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Kollu தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும். arugampul juice தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும். Inji and lemon juice தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. thayir தர்பூசணி தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது. water melon எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும். orange and lemon வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது. avocado பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்.

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

By TNPSCGK Editorial Team | At October 29, 2019 | Label : , , , | 0 Comments
thoppai
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

Tuesday, 22 October 2019

உடல் எடையை குறைத்தால் மாரடைப்பை தடுக்கலாம்!

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , , | 0 Comments


HEART ATTACK

இன்றைய உலகில் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. புதுபுது நோய்களால் ஏராளமனோர் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

மாரடைப்பு என்பது திடீரென ஏற்பட்டுஉயிரை பறிக்கும் ஒரு கொடிய நோய். முறைப்படி உடலை பேணிக்காத்தால் இதை தடுக்கலாம்.

மனிதன் வளர வளர கரோனரி தமனிகள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் கொலஸ்ட்ரால் படிகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இவ்வாறு ரத்த ஓட்டப்பாதை குறுகுவது அதிரொஸ்கிலிரோஸிஸ் என்றழைக்கப்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது.

பெண்களைவிட ஆண்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஆகியவை பெண்களை மாரடைப்பிலிருந்து பாதுகாக்கின்றன. இவை பெண்களுக்கு மெனொபாஸ் எனும் மாதவிடாய் நிற்கும் காலம்வரை இருக்கும்.மேலும் இந்தியர்கள் மற்றும் ஆசியர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மாரடைப்பு ஏற்படுவது ஏன்?புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை.

*குடும்பத்தில் பலருக்கு தொன்றுதொட்டு மாரடைப்பு, மன அழுத்தம், படபடப்பு, அதிக கோபம் போன்றவைகள்.

அறிகுறிகள்

*மாரடைப்பின் அறிகுறிகளை அடையாளம் கண்டுகொள்வது சற்று கடினம். அவை பிற அறிகுறிகளை போன்று ஒத்திருக்கலாம்.

*நெஞ்சுவலியுடன் மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் இறுக்கம்.

*மார்பின் முன் பகுதியிலோ அல்லது நெஞ்சுக்கூட்டின் பின்புறமோ வலி இருக்கலாம்.

*வாந்தி, இருமல், படபடப்பு மற்றும்20 நிமிடங்களுக்கு மேல் தொடரும் வலி.

*தீவிர நிலையில், ரத்த அழுத்தம் குறைவதால் மாரடைப்பு ஏற்பட்டவரின் உடல் வெளுத்து இறப்பும் நேரலாம்.நோயைக் கண்டறிவது எப்படி

*இதயத்தின் செயல்பாடுகளை மின்னணு வடிவில் பெற்றுத் தரும் இசிஜி எடுக்கப்படுகிறது. இசிஜி மூலம் இதயத்துடிப்பின் வேகம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*வழக்கத்திற்கு மாறான துடிப்புகள் உள்ளனவா என்றும், மாரடைப்பால் இதய தசைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் இசிஜி மூலம் அறியலாம்.

*ஆரம்ப நிலையில் இசிஜி சீராக இருப்பதால் மாரடைப்பிற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

*இதயதசைகளில் பாதிப்பு உள்ளதா எனக் கண்டறிய ரத்த பரிசோதனைகள் உதவும். மார்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்கப்படலாம். எக்கோகார்டியோகிராம் என்பது இதயத்தின் செயல்பாடுகளை அறிய உதவும் புதிய ஸ்கேன் முறை. கரோனரி ஆஞ்ஜியோகிராம் என்ற பரிசோதனை கரோனரி ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதா என்பதை உறுதியாக கண்டறிய முடியும்.

முதலுதவி சிகிச்சை

*மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ கவனிப்பும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அவசியம்.

*மாரடைப்பு ஏற்படும் ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு நிமிடமும் இக்கட்டானவை. முதலில் கரோனரி தமனி எனப்படும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள கட்டியைக் கரைக்கும் மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

*நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் கிடைக்கப்பெற்றால் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.

*நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்.

*நோயாளியின் வயது, மாரடைப்பின் தாக்கம், இதயம் பாதிக்கப்பட்டுள்ள அளவு மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து நோயாளிக்கு மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை மாறுபடும்.

*சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் இறுக்கமான உடைகளை தளர்த்தி பின்னர் படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.

*பல நேரங்களில் ரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாஸ்டி, பலூன்களை கொண்டு ரத்தக்குழாய்களை விரிவடைய செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகளாக இருக்கலாம்.

*மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் பெரும் பாலும் உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

குழந்தை பிறந்த பின் குண்டாகி விட்டீர்களா? ஒல்லியாக இதோ டிப்ஸ் ??

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments

WEIGHT LOSS
குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டல் செய்வது வழக்கம்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்.

இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.

உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்…

உங்களுக்கு உதவும் வகையில் வாழைத்தண்டைக் கொண்டு எப்படி உங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைத்தண்டின் நன்மைகள்

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.
வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை

    வாழைத்தண்டு
    மிளகு
    சீரகம்
    பூண்டு
    எலுமிச்சை சாறு
    சிறிது உப்பு

செய்முறை

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.
வாழைத்தண்டு மோர்

    வாழைத்தண்டு
    மோர்
    இஞ்சி சாறு
    பெருங்காயத் தூள்

செய்முறை

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும்.

மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.

இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

தொடர்ந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

உடற்பருமன் மனஉளைச்சல் தருகிறதா?

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments
weight loss

சிறு வயதிலிருந்தே உணவின் மீது எனக்குப் பிரியம் அதிகம். அதனால், இளமையிலேயே என் உடல் மிகவும் பருத்துவிட்டது. குண்டாயிருக்கும் காரணத்தால், பெண்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதற்காகப் பட்டினி கிடந்து இளைப்பதற்கும் எனக்கு மனமில்லை. ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து ஏன் எடை போடுகிறார்கள்? அவனுடைய குணத்தைப் பார்த்தல்லவா விரும்ப வேண்டும்?

Question:சிறு வயதிலிருந்தே உணவின் மீது எனக்குப் பிரியம் அதிகம். அதனால், இளமையிலேயே என் உடல் மிகவும் பருத்துவிட்டது. குண்டாயிருக்கும் காரணத்தால், பெண்கள் என்னை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இதற்காகப் பட்டினி கிடந்து இளைப்பதற்கும் எனக்கு மனமில்லை. ஒரு மனிதனின் தோற்றத்தை வைத்து ஏன் எடை போடுகிறார்கள்? அவனுடைய குணத்தைப் பார்த்தல்லவா விரும்ப வேண்டும்?

சத்குரு:
தோற்றம்தான் முக்கியம்?

ஒருவருக்குத் தோற்றம் முக்கியமல்ல என்று நான் சொல்வேன் என்று எதிர்பார்த்தால், ஏமாறுவீர்கள். உங்கள் தோற்றம்கூட உங்கள் தரத்தையும், குணத்தையும் பிரதிபலிக்கும் முக்கிய அம்சம்தான்!

உங்களை யாரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பது பொய். அவ்வளவு பெரிய உருவத்தை யாரால் பார்வையிலிருந்து தவறவிட முடியும்? பார்க்கிறார்களே தவிர, யாரும் வசீகரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
உங்களைப் பற்றியே அக்கறை இல்லாத நீங்கள் மற்றவரைப் பற்றி அக்கறை கொள்வீர்கள் என்று எப்படி நம்ப முடியும்?

உங்களோடு நடப்பவர்கள் சிறிய கதவுகள் வழியாகவும் போக விரும்பலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மனிதக் கண்கள் மனதுக்கு இதமானதை, இனிமையானதைத்தான் தேடும். மனித வடிவத்தில் இல்லாமல் உலக உருண்டையைப் போல மாறிக் கொண்டிருந்தால், யாரால் உங்களை சந்தோஷமாகப் பார்க்க முடியும்?
உங்கள் உடல் அளவுக்கு மீறிப் போனதை உரிய காலத்தில் நீங்களே கவனித்திருக்க வேண்டாமா? மற்றவர் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்று ஏன் காத்திருக்கிறீர்கள்?

உடலில் ஏதோ ஒரு குறை இருந்து பருமனாகியிருந்தால், அதற்கு வேறு தீர்வுகளை யோசிக்கலாம். ஆனால், நீங்களோ உணவின் மீது இருக்கும் காதலால் குண்டாகி இருக்கிறீர்கள். அளவுக்கு அதிகமாக உணவை வழங்கியதால், உங்கள் உடல் ஒரு மோசமான சேமிப்புக் கிடங்காக மாறிவிட்டது.

எப்போது சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது என்று கூட எந்தக் கவனமும் இல்லாமல் வாழ்பவரால், வேறு எதைச் சாதித்துக் காட்ட முடியும்?

தோற்றத்துக்கு எதற்கு முக்கியத்துவம், குணத்துக்கல்லவா கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலை வைத்துக் கொண்டு இருக்கும் லட்சணமே உங்கள் குணத்தைப் பற்றி கூறிவிடுகிறதே?

உங்களைப் பற்றியே அக்கறை இல்லாத நீங்கள் மற்றவரைப் பற்றி அக்கறை கொள்வீர்கள் என்று எப்படி நம்ப முடியும்?

அளவுக்கு அதிகமாக உண்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் உடலுக்குச் செல்லம் கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமல்ல! உண்மையில் அதை மிகக் கொடுமையாக வருத்தி தண்டனைதான் வழங்குகிறீர்கள். உங்கள் எடையைச் சுமக்க முடியாமல், உங்கள் உடலே கதறிக் கொண்டு இருக்கும். உட்கார்வதற்கும், எழுந்திருப்பதற்கும் உங்கள் எலும்புகள் எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை. பருமனாக இருப்பது ஆரோக்கியமல்ல. அது ஒரு வித நோய்.
மல்யுத்தம் - வெற்றி பெற்ற இளவரசர்!

ஓர் அரசருக்கு ஏழு வாரிசுகள். அரசர் இறந்ததும், நயவஞ்சக தளபதி, இளவரசர்களைச் சிறையில் அடைத்தான். ஒரு வருடம் கழித்து மல்யுத்தம் நடக்கும் என்றும், அதில் தளபதியுடன் மோதி வெற்றி பெறுபவனே சிம்மாசனத்தில் அமரத் தகுதியானவன் என்றும் ஒரு நிபந்தனை விதித்தான்.
பருமனாக இருப்பது ஆரோக்கியமல்ல. அது ஒரு வித நோய்.

"ஏழு பேருக்கும் சேர்த்து ஒரு ஆளுக்குப் போதுமான அளவு மட்டும் உணவைக் கொடுங்கள். எதிர்க்கும் சக்தி இல்லாமல் ஒரு வருடத்துக்குள் அவர்கள் இறந்து ஒழியட்டும்!" என்று உத்தரவிட்டான்.

ஒரு வருடம் கழித்து, மல்யுத்தப் போட்டிக்கான நாள் வந்தது. இளவரசர்களில் மூத்தவன் தளபதியோடு முழுச் சக்தியோடு மோதி, வெற்றியும் பெற்றான்.

'குறைந்த உணவை உட்கொண்டே அவன் சக்தி பெற்றது எப்படி?' என்று தோற்றுப்போன தளபதி ஆச்சரியமாகக் கேட்டான்.

"உன்னிடமிருந்து ராஜ்ஜியத்தை மீட்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் என் ஆறு சகோதரர்களும், தங்களுக்குக் கிடைத்த உணவையும் எனக்கே கொடுத்துப் பராமரித்தார்கள்" என்றான், வெற்றி பெற்றவன் நெகிழ்ச்சியுடன்.

மற்றவர் உணவையும் சேர்த்து அவன் சாப்பிட்டதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. உயிர் வாழ்வதற்காக அவன் சாப்பிட்டான். நீங்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறீர்கள்.
சரி என்ன செய்யலாம்?

உங்களை இன்னொருவர் பார்ப்பதற்காகவும், விரும்புவதற்காகவும், இணையாக ஏற்றுக் கொள்வதற்காகவும் நான் இதைச் சொல்லவில்லை. உங்களுக்கு ஒரு நிம்மதியான, சுகமான வாழ்க்கை வேண்டுமென்றால், அதற்கு ஒத்துழைத்து உங்கள் உடல் சுகம்தர வேண்டும். மனம் சுகம் தர வேண்டும்.

உண்மையிலேயே உங்களைப் பற்றிய அக்கறை இருந்தால், தினமும் பத்து மைல்கள் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். யோகா வகுப்புக்குச் செல்லுங்கள். சொல்லித் தரும் பயிற்சிகளை உண்மையாகச் செய்து பாருங்கள்.

உங்கள் உடல் மட்டுமல்ல. உங்கள் மனம், உங்கள் வாழ்க்கை ஒவ்வொன்றும் என்ன வடிவம் கொள்ளப்போகிறது என்பதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பு.

இதயத்தில் நல்லவர்கள் என்று சொல்லிக் கொண்டால்கூட, என்ன செய்கிறோம் என்ற கவனம் இல்லாமல் செயல்படுபவர்கள், பொறுப்பானவர்களாக இருப்பது இல்லை.

உடல் எடை கூட udal edai kooda

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments
weight increase
            உடல் எடை கூடுவது என்பது , உடல் தன் தேவைக்கும் அதிகமான ஆற்றலை ( சர்க்கரை  மற்றும் கொழுப்பை) சேமித்து வைக்கும் நிகழ்வாகும் . இது உடல் முழுவதும் குறிப்பாக அதிகம் அசையாத தசைகளில் சேமிக்கப்படுகிறது. அதனால்தான் உழைப்பு இல்லாதவர்களிடம் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் தசை கூடுகிறது.

1.சமைத்த உணவுகளை [அல்லது]  பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். இவ்வகை உணவுகள் அதிக கொழுப்பு ,அதிக சர்க்கரையை கொண்டுள்ளன. ஏனெனில் நாம்  சமைக்கும் போது அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, அதாவது குறைந்த கொதிநிலையில் மற்ற சத்துக்கள் அனைத்தும் ஆவியாகின்றன.கொழுப்பு அதிக கொதிநிலை கொண்டுள்ளதால் அவை ஆவியாகாமல் உணவிலேயே இருக்கின்றது.எனவே  வறுத்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை  கூடுகிறது.  உருளை சிப்ஸ்,பஜ்ஜி, போண்டா,வடை , தேன், ஜூஸ், சாலட்ஸ், சமைத்த காய்கறிகள் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் .

2. சர்க்கரை உடல் எடையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது . சர்க்கரை என்பது (குளுக்கோஸ்/ ஸ்டார்ச்) என அழைக்கப்படுகிறது.அதிக அளவிலான சர்க்கரை ( குளுக்கோஸ்/ஸ்டார்ச்) கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் தசைகளில் சேமிப்பதே உடல் எடை கூடுவதற்கு  முக்கிய  காரணம்.
இவை அரிசி உணவுகள்,கஞ்சி தண்ணி, சாதம் , மைதா, இட்லி ,தோசை,
பிரட் ,சர்க்கரை, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.

3. கொழுப்பு  உடல் எடை கூடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பை  உணவில் சேர்க்கும் போது நமது உடல் செல்களில்  கொழுப்பின் அடர்த்தி கூடுகிறது.இவை மொத்தமாக உடல் எடையை  கூட்டுகின்றன . உடலுக்கு ஆற்றல்  தேவைப்படும் போது ஒவ்வொரு கொழுப்பு மூலக்கூறும்  உருகி 2 குளுகோஸ்களை வழங்கும்  (கொழுப்பு = 1குளுகோஸ் + 1குளுகோஸ்) . இது உடல் செயல்களுக்கு பயன்படுகிறது . வருத்த உணவுகள் கொழுப்பினை கொண்டுள்ளன.உலர்ந்த பழங்கள் நீரை இழந்து இருப்பதால் கொழுப்பு  அதிக அளவில் இருக்கும்.கோழி இறைச்சியில் குறிப்பாக தொடைபகுதி, தோல்பகுதியில் கொழுப்பு அதிக அளவில் இருக்கும்.
நெய், பாலாடைக்கட்டி, வெண்ணை, பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , முந்திரி திராட்சை, வேர்கடலை, சிப்ஸ், வறுத்த இறைச்சி,ஐஸ் கிரீம், வற்றல் வகைகள் போன்றவற்றில் அதிக கொழுப்பு உள்ளது.

ஏன் உடல் குண்டாகிறது? உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments
weight loss reason 

 உடல் எடை கூடுவதற்கான காரணங்கள்


   1. மன அழுத்தம், 
    2.மரபியல் காரணிகளான ஜீன்,  
    3.குறைந்த ஹார்மோன்கள் செயல்பாடு,
   4.ஒழுங்கற்ற செரிமானம்,
   5.அதிகமாக சாப்பிடுதல்,
  6.சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள்,
  7.சுறுசுறுப்பின்மை,உழைப்பின்மை,
  8.உடற்பயிற்சி இல்லாமை,
  9.உடல் ஆரோக்கிய நிலைகளை சம்பந்தம்மாகவும்,
 10.சரியான தூக்கமின்மையும்,
 11.அதிகளவு கொழுப்பு ,சர்க்கரை(சாதம்)உணவுகளை சாப்பிடுவதாலும்,
 12.குறைந்த வளர்சிதை மாற்றம் போன்றவையும் காரணமாகின்றன.  
 13.நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது
  14 .தேவையற்ற நேரங்களில்  தேனீர் அருந்துவது 
  15. உடலில்  தேவையற்ற கழிவுபொருட்கள்  அதிகமாக சேர்ந்து இருப்பதும்   உடல் எடை கூடுவதற்கான காரணமாகும் .

பழங்கள் உடல் எடையைக் குறைக்குமா? fat loss fruits in tamil

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , , | 0 Comments

 ஆம்! பழங்கள் உடல் கொழுப்பை கரைக்கவும்,உடல் எடை குறைக்கவும் உதவுகின்றது.
            காலை   உணவு  சிட்ரிக் அமிலம் நிறைந்த பழத்துடன் அல்லது வைட்டமின் C  நிறைந்த பழத்துடன் துவங்குவது நல்லது . இப்படி செய்வது கொழுப்பை கரைப்பதர்க்கு சிறந்த வழியாக அமையும்.

1. திராட்சைப்பழம்
2. ஆப்பிள்கள் 

3. ஆரஞ்சு
4. வாழைப்பழங்கள்
5. ஸ்ட்ராபெர்ரிகள்
6. அன்னாசிபழம்
7. எலுமிச்சை பழம்  
8. தக்காளி 
9. பிளம்ஸ்
10.பப்பாளி
11. மாதுளை
12.  மாம்பழம்
13. சப்போட்டா

  மேல்கூறிய பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் இருப்பதால்  உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கவும்  பயன்படுகிறது.

நிறைவாக, சீராக, அளவாக உடல் எடை குறைக்க எளிய ஆலோசனைகள்!

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments
weight loss tips

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது.
நிறைவாக, சீராக, அளவாக உடல் எடை குறைக்க எளிய ஆலோசனைகள்!
நிறைவாக, சீராக, அளவாக உடல் எடை குறைக்க எளிய ஆலோசனைகள்!

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது நோயாக உருவெடுத்துள்ளது. மாறி வரும் உணவு பழக்கம், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என அதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லாமலும், உடம்பு மீது அக்கறை இல்லாமலும் இருந்துவிட்டு, உடல் எடை அதிகரித்ததற்குப் பிறகு ஜிம்முக்கும், மருத்துவமனைக்கும் செல்பவர்கள் அதிகம்.

சின்ன சின்ன விஷயங்களில் அக்கறையோடு, சிலக்கட்டுப்பாடுகளோடு இருந்தால் ஜிம்முக்குப் போகாமல், மருத்துவரை நாடாமல் உடல் எடையைக் குறைக்க முடியும் என்கிறார் பொது நல மருத்துவர் டாக்டர் கருணாநிதி, அவர் தரும் 10 ஆலோசனைகள்!

1. சர்க்கரையை தவிர்த்திடுங்கள்

உடல் எடை அதிகரிக்க சர்க்கரை முக்கியக் காரணம். அதனால் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். பால், டீ, காபியுடன் சேர்க்கும் சர்க்கரையைத் தவிர்த்தால் மட்டும் போதாது. ஸ்வீட், சாக்லேட்டுகளையும் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்ல... டெஸர்ட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை `சுகர்-ஃப்ரீ' டயட்டுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை குறைக்கவும் முடியும்.

2. எலுமிச்சை கலந்த தண்ணீர்:

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சம் பழத்தை மிதமான வெந்நீரில் பிழிந்து குடிப்பது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைய உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியும் மேம்படும். இந்தக் கலவையுடன் சிறிது தேன் சேர்த்தும் அருந்தலாம்.

3.சின்னச் சின்ன உடற்பயிற்சிகள்

வீட்டில் சிறு சிறு உடற்பயிற்சிகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள்  செய்து வரலாம். இது உடல் எடை குறைய மிகவும் உதவியாக இருக்கும்.

4. சாப்பாட்டில் கவனம்:

சாப்பிடும்போது,  சாப்பாட்டில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். டி.வி பார்த்துக் கொண்டோ மொபைலில் பேசிக்கொண்டோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். முழு கவனமும் சாப்பாட்டில் இல்லாதபோது வழக்கத்தை விட அதிகமாக சாப்பிட்டு விடுவோம். அதனால், டி.வி,மொபைல் போன்றவற்றிலிருந்து சற்று விலகி  இருப்பது நல்லது.

5. லிஃப்டைத் தவிருங்கள்:

இன்றைக்கு பெரும்பாலானோர்  ஏ.சி பஸ் அல்லது காரில்தான்  பயணம் செய்கிறார்கள். இது வியர்வை வெளியேற தடையாக இருக்கும். உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. எனவே  அலுவலகத்தில்  லிஃப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது நல்லது. தொடக்கத்தில் இது கடினமாக இருந்தாலும் பழகினால் சரியகி விடும்.

6.காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்கள்

சீஸ், பட்டர் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். காலை மற்றும் இரவு வேளைகளில்  காய்கறி, பழங்களையோ  சாலட்டுகளையோ சாப்பிடுவது நல்லது.

7. வறுத்த, பொரித்த உணவு வேண்டாம்

 சிக்கன் 65, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணெயில் பொறித்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகள்தான் உடல் பருமனுக்கு முக்கியக் காரணம்.

8. தண்ணீர் அவசியம்:

உடலின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியம். மனித உடல் 70 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும்.  உடலில் நீரிழப்பு  ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும்.

9.நிறைவான தூக்கம் தேவை:

எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அதிலும் பெண்களுக்கு 8-10 மணிநேரம் வரை தூக்கம் கண்டிப்பாகத் தேவை. அமைதியான தூக்கம் இல்லையென்றால் கடும் சோர்வு ஏற்படும். வேலைகளில் சரியாகக் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும். தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டு  வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

10. சீரான நடைபயிற்சி

காலை எழுந்ததும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடக்கலாம்.

உடல் எடையை குறைக்க மிக எளிய உணவு குறிப்புகள்

By TNPSCGK Editorial Team | At October 22, 2019 | Label : , | 0 Comments


weight loss (udal edai kuraikka) tips

 தேவையற்ற கொழுப்பு நம் உடலில் அதிகம் சேருவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்களே. தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்வது, உடலுக்கு வேலை கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும், அட்ரினல் சுரப்பு அதிகரிப்பது, தைராய்டு சுரப்பு குறைவது போன்றவற்றாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சிலருக்கு இது பரம்பரை வழியாகவும் வரும். சித்த மருத்துவம் மூலம் உடல் எடையை குறைக்கு சில அற்புதமான குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள். weight loss (udal edai kuraikka) 

குறிப்பு 1 : இஞ்சி மற்றும் தேன் ஆகிய இரண்டின் கலவை மூலம் உடல் எடையை குறைக்கலாம். இஞ்சியை தோல் சீவி அதில் இருந்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்து அதோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து பின் இரண்டையும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தேவை அற்ற கொழுப்புகள் நம் உடலை விட்டு நீங்கும். இதன் மூலம் உடல் எடை குறையும்.


 குறிப்பு 2 : ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு அதோடு சம அளவு தேன் கலந்து ஒரு டம்ளர் வெந்நீரோடு குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதோடு உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பும் குறையும்.


 குறிப்பு 3 : நான்கு முதல் ஐந்து பல் பூண்டு எடுத்தோக்கொண்டு அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு கொதிக்க வைத்து பின் அந்த பாலையும் பூண்டையும் பருகி வர உடல் எடை குறையும். 


குறிப்பு 4 : ஒரு டம்ளர் மோர் எடுத்துக்கொண்டு அதில் கேரட்டை துருவி போட்டு பின் இரண்டை மிக்ஸியில் அறைந்து குடித்தால் உடல் எடை குறையும்.

குறிப்பு 5 : பெருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இரு வேலையும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பெருஞ்சீரக பொடியை கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். இதையும் படிக்கலாமே: தலை முடி வளர சித்த மருத்துவ குறிப்பு எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. தர்பூசணி, ஆப்பிள், பாதாம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உண்பது நல்ல பலன் தரும்.

Sunday, 13 October 2019

உங்க கிச்சன்ல இதெல்லாம் இருந்தா நீங்க வெயிட் போடவே மாட்டீங்க!!!

By TNPSCGK Editorial Team | At October 13, 2019 | Label : , , | 0 Comments


நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறைக்கும் நம்முடைய இந்த நவீன வாழ்க்கை முறைக்கும் இடையே சிறு வித்தியாசம் தான் உள்ளது. நம்முடைய முன்னோர்கள் தங்களுடைய எல்லா வகையான உடல்ரீதியான பிரச்னைகளையும் தாங்கள் உண்ணும் உணவின் மூலமாகவே சரிசெய்து கொண்டனர். ஆனால் நாமோ இன்றைக்கு நம்முடைய எல்லா பிரச்னைகளுக்கும் மருந்து சாப்பிடுகிறோம். அதாவது உணவே மருந்தாக இருந்த நம்முடைய பழக்க முறை தற்போது மருந்தே உணவாக மாறிவிட்டது.

உடல்பருமன்

இந்திய உணவு முறை மற்ற உலக நாடுகள் பார்த்து வியக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் மேலைநாட்டு உணவுக் கலாச்சாரத்தை உயர்ந்தது என்று எண்ணிக்கொண்டு, ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்துக்கு மாறிவிட்ட நம்முடைய நாட்டில் பெரும்பான்மை சதவீதம் பேர் உடல்பருமனால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உடல்பருமன்தான் நம்முடைய உடலில் உண்டாகும் பெரும்பான்மையான பிரச்னைக்கு காரணம் என்பதைப் புரிந்து கொண்டாலே உங்களுக்கு உடல்பருமன் குறித்த பிரச்னையின் தீவிரம் புரியும். குறிப்பாக, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குப் பெரிதும் காரணமாக இருப்பது இந்த உடல்பருமன்தான். அந்த உடல்பருமனை எப்படித்தான் சரி செய்வது என்பது தானே உங்களடைய கேள்வி...



  

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!

நோ டயட், நோ உடற்பயிற்சி

இதற்காக உடற்பயிற்சி, நடைபயிற்சி, வயிற்றைக் கட்டி டயட் இருப்பது போன்றவற்றையெல்லாம் இனி செய்ய வேண்டிய அவசியமில்லை. டயட், உடற்பயிற்சி எதுவுமில்லாமல் எப்படி எடை குறையும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு நம்முடைய கிச்சனில் இருக்கும் சில உணவுப்பொருள்களே போதும்.

கிச்சன் பொருள்கள்

நம்முடைய இந்தியர்களின் கிச்சனில் இருக்கும் சில உணவுப்பொருள்களே நம்முடைய உடல்பருமனாக விடாமல் காப்பாற்றி, நம்மை சிக்கென வைத்துக்கொள்ள உதவும். அப்படி உடலை சிக்கென வைத்துக் கொள்ள நம்முடைய முன்னோர்கள் என்னவெல்லாம் சாப்பிட்டார்கள் என்று தெரிந்துகொள்வோமா?

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பு இல்லாத இந்திய சமையலறையே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். இதில் வைட்டமின் ஏ, சி, பி, ஈ, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. மேலும் மிக அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடல் பருமன் உண்டாகாமல் தவிர்க்க முடியும். குறிப்பாக, பாசிப்பருப்பைச் சமைத்து சாப்பிடுவதைவிட, முதல்நாள் இரவு ஊறவைத்து முளைகட்டிய பயறுடன் காரட், பீன்ஸ், ஸ்பின்னாக் போன்ற காய்கறிகளுடன் லெமன் ஜூஸ் சேர்த்து காலையில் சாப்பிட்டு வரலாம். 100 கிராம் பாசிப்பயறில் 347 கலோரி கிடைக்கும்.

வால்நட்

வால்நட் மூளை வளர்ச்சிக்கு உதவும் மிகச்சிறந்த உணவு. இதில் உயர்தர ஆன்டி ஆக்சிடண்டுகள்,ஃபோலேட் , ஒமேகா3 ஃபேட்டி ஆசிட், மாங்கனீசு, காப்பர், புரோட்டீன் ஆகியவை அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலையில் சிறிது வால்நட் சாப்பிட்டு வருவது நல்லது. 10 கிராம் வால்நட்டிலிருந்து 65.4 கலோரிகள் பெற முடியும்.

ஸ்பின்னாக்

வைட்டமின் கே, வைட்டமின் ஏ, ஃபோலேட், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் என அத்தனை சத்துக்களும் அடங்கியது ஸ்பின்னாக். இது உடல்பருமனை குறைக்க உதவும் மிக முக்கிய உணவு.

100 ஸ்பின்னாக் = 23 கலோரிகள்

பாகற்காய்

பாகற்காய் என்று சொன்னோலே பலருக்கும் கசக்கும். ஆனால் பாகற்காயில் மிக அதிக அளவு உள்ள பாஸ்பரஸ், ஜிங்க், பொட்டாசியம், மக்னீசியம் ஆகியவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் உறிஞ்சப்படுகிறது. பாகற்காயில் 85 முதல் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருப்பதால் இது உடல்பருமன் உண்டாவதைத் தடுக்கும்.

100 கிராம் பாகற்காய் = 34 கலோரி

பீட்ரூட்

பீட்ரூட்உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும் உணவுகளில் மிக முக்கியமானது. பீட்ரூட் உடலில் உள்ள டாக்சினை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

100 பீட்ரூட் = 43 கலோரிகள்

பாதாம்

பாதாம் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருந்தால், அது அதிக பசியைத் தூண்டும். ஆனால் உடலுக்கு அது ஆற்றலைத் தராது. அதற்கு பதிலாக உடல்பருமனையே உண்டாக்கும். பாதாமில் உள்ள ஒமேகா3, ஒமேகா6, ஒமேகா9 ஆகியவை உடல்பருமனைக் குறைக்கும்.

10 கிராம் பாதாம் = 57 கலோரிகள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போக வேண்டாம் என்று சொல்வார்கள். ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் பசியைக் கட்டுப்படுத்தும். ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 4 கிராம் அளவுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இது பெண்களுக்கு அன்றாட நார்ச்சத்தின் தேவையை 16 சதவீதமும் ஆண்களுக்கு 11 சதவீதமும் நிறைவடையச் செய்கிறது. இது மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி உடல்எடையைக் குறைக்க உதவுகிறது.

100 கிராம் ஆப்பிள்= 52 கலோரிகள்

கருப்பு பீன்ஸ்

கருப்பு பீன்ஸில் புரோட்டீனும் நார்ச்சத்தும் மிக தாராளமாகக் கிடைக்கின்றன. அதோடு வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் இது எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, ஜீரணத்தை துரிதப்படுத்துகிறது.

100 கிராம் கருப்பு பீன்ஸ் = 339 கலோரிகள்

காலிஃபிளவர்

வைட்டமின் கே, தையமின், ரைபோஃபிளேவின், மக்னீசியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், புரோட்டீன், மாங்கனீசு, பொட்டாசியம் என அத்தனை சத்துக்களும் நிரம்பியது தான் காலிஃபிளவர்.

100 கிராம் காலிஃபிளவர் = 25 கலோரி

பட்டை

பட்டை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதனால் நீங்கள் அன்றாடம் குடிக்கும் டீயில் ஒரு சிட்டிகை பட்டைத்தூளை சேர்த்துக் கொள்ளலாம்.

100 கிராம் பட்டை = 247 கலோரிகள்

மஞ்சள்

மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது நமக்குத் தெரியும். ஆனால் மஞ்சளில் உடல்எடையைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. கேன்சரை அடியோடு காலி செய்யும் மருந்தாக மஞ்சளை சொல்லலாம்.

100 கிராம் மஞ்சள் = 354 கலோரிகள்

முள்ளங்கி

முள்ளங்கியிலும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. ஒரு கப் முள்ளங்கியில் 3 கிராம் அளவுக்கு ஃபைபர் கிடைக்கிறது. இது கிட்டதட்ட ஒரு நாளின் நார்ச்சத்து தேவையை 12 சதவீதம் நிறைவு செய்கிறது.

100 கிராம் முள்ளங்கி = 15 கலோரிகள்

பூண்டு

உயர் ரத்த அழுத்தத்தையும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் அற்புத சக்தி பூண்டுக்கு உண்டு. உடல்எடையைக் கட்டுக்குள் வைக்க தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வரலாம். வாயுத்தொல்லையைத் தீர்க்கும். கேன்சரை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டது. நோய்த்தொற்றுக்களை தீர்க்கும்.

கொள்ளுப்பயறு

அதிக அளவு நார்ச்சத்தும் புரோட்டீனும் கொண்டது கொள்ளுப்பயறு. ரத்த சர்க்கரை அளவு அதிகமானாலே உடல்எடையும் தானாக ஏற ஆரம்பிக்கும். கொள்ளுப்பயறை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தாலே போதும் உடல்எடையில் நல்ல மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

100 கிராம் கொள்ளுப்பயறு = 116 கலோரிகள்

வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால் எடை கூடும் என்றுதானே இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டால் உடல்எடை குறையும் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?... ஆம். வாழைப்பழம் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். எடையைக் கூட்டாது.

100 கிராம் வாழைப்பழம் = 89கலோரிகள்

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி உள்ளது. இது ஹார்மோனில் கலந்து வயிறை எப்போதும் நிறைவாக வைத்திருக்கச் செய்யும். தக்காளி விதை சிறுநீரகக் கல்லை உண்டாக்கும் என்று சொல்வார்கள். அதனால் விதைகளைத் தவிர்த்துவிட்டு பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் கேன்சர் உண்டாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.

100 கிராம் தக்காளி = 18 கலோரிகள்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சமைக்கும்போது நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். டைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும். இதிலுள்ள பாலிஃபினைல் நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்.

100 கிராம் ஆலிவ் ஆயில் = 884 கலோரிகள்

முட்டைகோஸ்

முட்டைக்கோஸ் அதிக அளவு நார்ச்சத்தும் மிகக்குறைந்த அளவு கலோரியும் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கூட்டு, பொரியல், சாம்பார், சாலட், ஜூஸ் என பல வழிகளில் முட்டைகோஸை உணவில் சேர்த்துக் கொள்ள முடியும்.

100 கிராம் முட்டைக்கோஸ் = 25 கலோரிகள்

முட்டை

முட்டையை ஊட்டச்சத்துகள் நிறைந்த பவர்ஹவுஸ் என்று சொல்லலாம். மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று. முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளதால் உடல்எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக முட்டையை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

1 முட்டை = 78 கலோரிகள்

பிளாக் காபி

பிளாக் காபி உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும் என்று ஆராய்ச்சியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காபி மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும். ஆனால் பால், சர்க்கரை சேர்த்துக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

1 கப் பிளாக் காபி = 2 கலோரி

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

அழகான வடிவமைப்பு, நிறமூட்டப்பட்ட உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள், ரெடிமேடாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளைத் தவிர்த்தாலே போதும் உடல்பருமன் பிரச்னையில் இருந்து நம்மால் எஸ்கேப் ஆகிவிட முடியும்.

உடல் எடையில் கவனம்

By TNPSCGK Editorial Team | At October 13, 2019 | Label : , , | 0 Comments


நமது உயரத்துக்குத் தகுந்த எடையைக் கணக்கிட 'உடல் நிறை குறியீடு (Body Mass Index, BMI)’ பயன்படுகிறது. உங்களின் உயரம் (மீட்டர்), எடையை (கிலோ) பிஎம்ஐ = kg/m2 என்ற சூத்திரத்தில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 18.5 to 24.9 வரை பிஎம்ஐ என்பது ஆரோக்கியமான உடல் எடையைக் குறிக்கும். உலக சுகாதார நிறுவனம், பிஎம்ஐ 25 முதல் 30-க்குள் இருந்தால், 'அதிக எடை கொண்டவர்கள்' என்றும், 30-க்கு மேலிலிருந்தால் 'உடல்பருமன் கொண்டவர்கள்' என்று வரையறுக்கிறது.


 இடுப்புச் சுற்றளவையும் இன்னொரு கணக்கீடாகக் கொள்ளலாம். இடுப்பு சுற்றளவு, ஆண்களுக்கு 94 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 80 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இருந்தால், கண்டிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும்.

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!
ஆண்களுக்கு 102 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும், பெண்களுக்கு 88 சென்டிமீட்டர் அல்லது அதற்கு மேலாகவும் இடுப்பு சுற்றளவு இருந்தால், சர்க்கரை நோய், புற்று நோய், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

Tuesday, 9 July 2019

எடை குறைப்புக்கு உதவும் காதல் ஹார்மோன்

By TNPSCGK Editorial Team | At July 09, 2019 | Label : , | 0 Comments


காதல் ஹார்மோன் என்னென்ன செய்யும் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இது உடல் எடை பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள Endocrine society.மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்னும் ஹார்மோன் சமூக தொடர்பு, நம்பிக்கை, கவலை, பாலியல் இனப்பெருக்கம், பிரசவம், தாய்-குழந்தை பிணைப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதைத்தான் Love hormone என்கிறார்கள். தாய்ப்பால் சுரப்பிலும் ஆக்சிடோஸின் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சிடோசின் ஹார்மோன் உணவுக்கான மூளை வெகுமதி சமிக்ஞைகளை பலவீனப்படுத்துவதாகவும், அது நமது சாப்பாடு நடத்தை மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இதற்காக ஆரோக்கியமான, உடல் பருமனுள்ள 10 இளைஞர்களை இரண்டு முறை வரவழைத்து ஆக்சிடோஸின் நாசில் ஸ்ப்ரேவை சிங்கிள் டோசாக கொடுக்கப்பட்டு சோதனை செய்தார்கள். மருந்து செலுத்தப்பட்டு ஒரு மணி நேரத்தில் வெண்திரையில் அதிக கலோரி, குறைந்த கலோரி உணவுகள் மற்றும் உணவல்லாத படங்களும் காட்டப்பட்டன. அவர்களின் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை நியூரோ இமேஜிங் முறையில் சோதித்தார்கள்.
ஆக்சிடோஸின் கொடுக்கப்படாதபோது உணவுத்தேவைக்கான ரிவார்ட் சென்டர் தூண்டப்பட்டதையும், அதிகமாக உண்ண வேண்டும் என்ற வேட்கையும் ஏற்பட்டது. ஆக்சிடோஸின் கொடுக்கப்பட்டபோது மனம் அமைதியடைந்த உணர்வு ஏற்பட்டதால் உணவுத்தேவை சீராகவும், ஆரோக்கியமானதாகவும் அமைந்தது.
'ஆக்சிடோஸின் ஹார்மோன் சுரக்காத போது மன அழுத்தத்துக்கு ஆளாகி அதிகமாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் இதன் முக்கிய காரணம். எனவே, உடல் பருமன் சிகிச்சையில் ஆக்சிடோஸின் மருந்து நல்ல பயனிக்கக்கூடும் என்பதை இதிலிருந்து கண்டறிந்திருக்கிறோம்' என்று இது பற்றி தெரிவித்திருக்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவரான டாக்டர் கெரோம். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த நாளமில்லா சுரப்பியலாளர்கள் கூட்டத்தில் ஆண்டு அறிக்கையாக ENDO 2019 என்ற பெயரில் இதனை Endocrine Society சமர்ப்பித்திருக்கிறது.
Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz