Tuesday, 22 October 2019

உடல் எடை கூட udal edai kooda

weight increase
            உடல் எடை கூடுவது என்பது , உடல் தன் தேவைக்கும் அதிகமான ஆற்றலை ( சர்க்கரை  மற்றும் கொழுப்பை) சேமித்து வைக்கும் நிகழ்வாகும் . இது உடல் முழுவதும் குறிப்பாக அதிகம் அசையாத தசைகளில் சேமிக்கப்படுகிறது. அதனால்தான் உழைப்பு இல்லாதவர்களிடம் இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் தசை கூடுகிறது.

1.சமைத்த உணவுகளை [அல்லது]  பதப்படுத்தப்பட்ட உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும். இவ்வகை உணவுகள் அதிக கொழுப்பு ,அதிக சர்க்கரையை கொண்டுள்ளன. ஏனெனில் நாம்  சமைக்கும் போது அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது, அதாவது குறைந்த கொதிநிலையில் மற்ற சத்துக்கள் அனைத்தும் ஆவியாகின்றன.கொழுப்பு அதிக கொதிநிலை கொண்டுள்ளதால் அவை ஆவியாகாமல் உணவிலேயே இருக்கின்றது.எனவே  வறுத்த உணவுகளை உண்ணும் போது உடல் எடை  கூடுகிறது.  உருளை சிப்ஸ்,பஜ்ஜி, போண்டா,வடை , தேன், ஜூஸ், சாலட்ஸ், சமைத்த காய்கறிகள் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும் .

2. சர்க்கரை உடல் எடையை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது . சர்க்கரை என்பது (குளுக்கோஸ்/ ஸ்டார்ச்) என அழைக்கப்படுகிறது.அதிக அளவிலான சர்க்கரை ( குளுக்கோஸ்/ஸ்டார்ச்) கொழுப்பாக மாற்றப்பட்டு உடல் தசைகளில் சேமிப்பதே உடல் எடை கூடுவதற்கு  முக்கிய  காரணம்.
இவை அரிசி உணவுகள்,கஞ்சி தண்ணி, சாதம் , மைதா, இட்லி ,தோசை,
பிரட் ,சர்க்கரை, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.

3. கொழுப்பு  உடல் எடை கூடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பை  உணவில் சேர்க்கும் போது நமது உடல் செல்களில்  கொழுப்பின் அடர்த்தி கூடுகிறது.இவை மொத்தமாக உடல் எடையை  கூட்டுகின்றன . உடலுக்கு ஆற்றல்  தேவைப்படும் போது ஒவ்வொரு கொழுப்பு மூலக்கூறும்  உருகி 2 குளுகோஸ்களை வழங்கும்  (கொழுப்பு = 1குளுகோஸ் + 1குளுகோஸ்) . இது உடல் செயல்களுக்கு பயன்படுகிறது . வருத்த உணவுகள் கொழுப்பினை கொண்டுள்ளன.உலர்ந்த பழங்கள் நீரை இழந்து இருப்பதால் கொழுப்பு  அதிக அளவில் இருக்கும்.கோழி இறைச்சியில் குறிப்பாக தொடைபகுதி, தோல்பகுதியில் கொழுப்பு அதிக அளவில் இருக்கும்.
நெய், பாலாடைக்கட்டி, வெண்ணை, பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு , முந்திரி திராட்சை, வேர்கடலை, சிப்ஸ், வறுத்த இறைச்சி,ஐஸ் கிரீம், வற்றல் வகைகள் போன்றவற்றில் அதிக கொழுப்பு உள்ளது.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz