Tuesday, 22 October 2019

உடல் எடையை குறைக்க மிக எளிய உணவு குறிப்புகள்



weight loss (udal edai kuraikka) tips

 தேவையற்ற கொழுப்பு நம் உடலில் அதிகம் சேருவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்களே. தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்வது, உடலுக்கு வேலை கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும், அட்ரினல் சுரப்பு அதிகரிப்பது, தைராய்டு சுரப்பு குறைவது போன்றவற்றாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சிலருக்கு இது பரம்பரை வழியாகவும் வரும். சித்த மருத்துவம் மூலம் உடல் எடையை குறைக்கு சில அற்புதமான குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள். weight loss (udal edai kuraikka) 

குறிப்பு 1 : இஞ்சி மற்றும் தேன் ஆகிய இரண்டின் கலவை மூலம் உடல் எடையை குறைக்கலாம். இஞ்சியை தோல் சீவி அதில் இருந்து ஒரு ஸ்பூன் சாறு எடுத்து அதோடு ஒரு ஸ்பூன் தேன் கலந்து பின் இரண்டையும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தேவை அற்ற கொழுப்புகள் நம் உடலை விட்டு நீங்கும். இதன் மூலம் உடல் எடை குறையும்.


 குறிப்பு 2 : ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு அதோடு சம அளவு தேன் கலந்து ஒரு டம்ளர் வெந்நீரோடு குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதோடு உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பும் குறையும்.


 குறிப்பு 3 : நான்கு முதல் ஐந்து பல் பூண்டு எடுத்தோக்கொண்டு அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு கொதிக்க வைத்து பின் அந்த பாலையும் பூண்டையும் பருகி வர உடல் எடை குறையும். 


குறிப்பு 4 : ஒரு டம்ளர் மோர் எடுத்துக்கொண்டு அதில் கேரட்டை துருவி போட்டு பின் இரண்டை மிக்ஸியில் அறைந்து குடித்தால் உடல் எடை குறையும்.

குறிப்பு 5 : பெருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இரு வேலையும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பெருஞ்சீரக பொடியை கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும். இதையும் படிக்கலாமே: தலை முடி வளர சித்த மருத்துவ குறிப்பு எண்ணெய் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. தர்பூசணி, ஆப்பிள், பாதாம், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உண்பது நல்ல பலன் தரும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz