Saturday, 30 March 2019

சளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப் HEALTH TIPS





ஆங்கில மருத்துவம் தலை தூக்கவே நாம் நமது பாரம்பரிய மருத்துவ முறைகளை மறந்து வருகின்றோம். இதனால் நமக்கு எளிமையான முறையில் கிடைக்கும் பல மருத்துவ பலன்கள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன.

நம்மைச் சுற்றி வளரும் செடி கொடிகளின் மூலமே நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இதனை நமது முன்னோர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் அவற்றை அதையும் இப்போது உபயோகிப்பதில்லை.


நமது பாரம்பரிய மருத்துவம் மறைந்து விடக்கூடாது என்பதற்கான ஒரு பதிவுதான் இது. இந்த பதிவில் நாம் முடக்கத்தான் கீரையின் பலன்களை பற்றி பார்ப்போம்.

முடக்கத்தான் கீரையானது வயல்வெளிகளில் தானாக வளர்ந்து வரும் கொடி வகையை சேர்ந்தது. இந்த கீரையானது கிராமங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதனை நமது வீடுகளில் கொடியாகவும் வளரச் செய்யலாம்.

மூட்டு வலி:
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை, 1/2 டீஸ்பூன் சீரகம், 1 பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து அதை ஒரு கப் இட்லி மாவுடன் கலந்து தோசையாக ஊற்றி சாப்பிட்டு வர மூட்டு வலி பறந்து போகுமாம்.

பொடுகு போக்கும் முடக்கத்தான் கீரை:
ஒரு கட்டு முடக்கத்தான் கீரையை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின்னர் அந்த நீரை கொண்டு தலை குளிப்பதற்கு முன்பு தலை முடியை நன்கு அலசி விட்டு குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். முடக்கத்தான் கீரையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் ஆற வைத்து எடுத்து கொள்ளவும். அந்த எண்ணெயை குளிப்பதற்கு முன் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.


சளி இருமலை விரட்டும் முடக்கத்தான் கீரை சூப்:
ஐந்து மிளகுடன் 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும், அதனுடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும். வாணலியில் 1/2 டீஸ்பூன் நெய் விட்டு சூடானவுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், பூண்டு விழுதை மிதமான சூட்டில் வதக்கி கொள்ளவும். இதில் 1/2 கப் முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு கீரையை வேக விடவும், பாதி வெந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

கீரை நன்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பின்னர் பருப்பு மசிக்கும் மத்து கொண்டு கடைந்து பின்னர் வடிகட்டி எடுத்தால் சுவையான முடக்கத்தான் கீரை சூப் தயார். இந்த சூப் குழந்தைகளுக்கு வரும் சளி, இருமல் தொந்தரவை விரட்டும்.


முடக்கத்தான் கீரை துவையல்:
வாணலியில் எண்ணெய் விட்டு இரண்டு வர மிளகாயுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளை உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். 1/4 கப் முடக்கத்தான் கீரையை எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும். சிறிது புளியை நூறு கிராம் தேங்காய் துருவலுடன் சேர்த்து வறுத்து கொள்ளவும். வறுத்து வைத்த எல்லா பொருட்களையும் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் முடக்கத்தான் கீரை துவையல் தயார்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz