Wednesday, 24 April 2019

முன்னோர்களுக்கு புற்று நோய் இருந்தால் உங்களுக்கு வராமல் தடுக்க என்னதான் வழி?


இன்று உலகை பயமுறுத்திக்கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்று புற்றுநோய். வயது வித்தியாசம் பாராமல் தாக்குகிறது. புகையிலை பொருட்கள்  பயன்படுத்துவதால் புற்றுநோய் அதிகம் வருகிறது. புகையிலையை எந்த வகையில் பயன்படுத்தினாலும் ஆபத்துதான். ஆண்கள் மட்டுமின்றி சில  பெண்களிடம் கூட புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது வேதனைக்குரிய விஷயம். கிராமங்களில் ஆண், பெண் வித்தியாசமின்றி சிலர் புகையிலை  மெல்லும் பழக்கத்துக்கு அடிமை ஆகிவிட்டனர். இதனால் வாய், நுரையீரல் புற்றுநோய் வருகின்றன. புகையிலை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசடைந்து இருந்தால்  கூட புற்றுநோய் பாதிப்பு வரும் என்பதையும் மக்கள் உணர வேண்டும். உணவு பழக்கங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். காரணம், புற்றுநோய் குணமடைய மாத்திரை மட்டுமின்றி ஊட்டச்சத்தும் அவசியம். நாம் உணவில் பயன்படுத்தும் பூண்டு நம்முடைய குடல், கணையம் என  வயிற்றில் ஏற்படும் புற்று நோயை தடுக்கும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கை கீரை மிகவும் நல்லது. வைட்டமின் சி, சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள்,  கால்சியம், நார்சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிகளவும்,  ஓரளவு தாது உப்புக்கள் இருக்கின்றன. திராட்சையின் தோலில் குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவை புற்று நோயின் செல்கள்  வளர்ச்சியை தடுக்கும் என்கின்றன ஆய்வுகள். மஞ்சளில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை  தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொரித்த உணவுகளை தவிர்த்தல் நலம்:ஒருசிலர் எப்போதும் எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இது, உடலுக்கு உகந்தது அல்ல. எண்ணெயும், கொழுப்பும் அதிகம்  நிறைந்த உணவு பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும். அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை மீண்டும்  சூடுபடுத்தி உண்பது தவறு. ஆரம்ப அறிகுறிகள் 1. உடலில் எந்த இடத்தில் கட்டி வந்தாலும் உடனே கவனிக்க வேண்டும். வலி இல்லை என்ற அலட்சியம் ஆபத்து. புற்றுநோய் கட்டிகள் பெரும்பாலும் வலி இல்லாத  கட்டிகளாக இருக்கும். சில நாட்களில் குணமாகாத கட்டியோ, வீக்கமோ இருந்தால் மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை பெற வேண்டும். பெண்களுக்கு  மார்பகத்தில் வலி இல்லாத அல்லது வலியுடன் கட்டி தோன்றினால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். பெண்களை மார்பக புற்றுநோயும், கர்ப்பவாய்  புற்றுநோயும் அதிகளவில் தாக்குகின்றன.2. திடீர் எடை குறைவும் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். சிலர் தாங்களாகவே ஏதாவது காரணம் கற்பித்துக்கொள்வார்கள். இது தவறு. நன்றாக சாப்பிட்டும் உடல்  எடை குறைகிற மாதிரி இருந்தால், மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும்.

3. உடல் பாகங்களில் இருந்து ரத்தம் வடிதலும் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்று. வாய் அல்லது மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், அடிபட்ட இடத்தில் இருந்து  அதிக ரத்தப்போக்கு, மலம் கழிக்கும்போது ரத்தம் வடிவதும் கவனிக்க வேண்டியதே. 4. காலை கடனில் ஏற்படும் திடீர் மாற்றமும் கவனத்தில் கொள்ள வேண்டிய சிக்கல்தான். சிலருக்கு திடீரென வயிற்றுப்போக்கோ, மலச்சிக்கலோ ஏற்படலாம். இது  ஓரிரு நாட்களில் சரியாகாமல் தொடர்ந்தபடி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.புற்றுநோய் அதிகம் தாக்கும் உறுப்பு எது?இந்தியாவில் 2012-ம் ஆண்டு மட்டும் 7 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். 2008-2011 வரை திரட்டப்பட்ட தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.தேசிய புற்றுநோய் பதிவு திட்ட (National Cancer Registry Programme - NCRP) அமைப்பு 2008 முதல் 2011 வரை காலத்துக்கு தயாரித்த அறிக்கை, இந்தியாவில்  காணப்படும் புற்றுநோய் வகைகள் குறித்தும் அவை அதிகமாக உள்ள பகுதிகள் குறித்தும் முக்கிய குறிப்புகளை தெரிவிக்கிறது. இந்தியாவில் 2012ல் 6,82,830 பேர்  புற்றுநோயால் இறந்துள்ளனர். இதில் ஆண்கள் 3,56,730,பெண்கள் 3,26,100. அதாவது வளர்ந்தவர்களில் ஒரு லட்சம் பேரில் 64.49 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்.  உலகம் முழுக்க 2012-ல் 82 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இந்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டு  இருக்கிறது.ஆண்களுக்கு நுரையீரல், வாய், உணவுக்குழாய், வயிறு ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா,  திரிபுரா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகம் பதிவாகி இருக்கிறது. குஜராத், மகாராஷ்டிரம், போபால் (ம.பி.)  ஆகியவற்றில் வாய் புற்றுநோய் அதிகமாக பதிவாகி இருக்கிறது.பெண்களை பொருத்தவரை மார்பக புற்றுநோயும், கருப்பைவாய் புற்றுநோயும் அதிகம். மணிப்பூர், மிசோரத்தில் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகம்.  மேகாலயத்தில் உணவுக்குழாய் புற்றுநோய் அதிகம். தைராய்டு சுரப்பியிலும் மார்பகத்திலும் புற்றுநோய் ஏற்படுவது கேரளத்தில் கொல்லம்,  திருவனந்தபுரத்தில் அதிகம்.முதல்முறையாக சிறுவர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து தனி கவனம் செலுத்தி தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. புற்றுநோய் கட்டிகளால்  பாதிக்கப்படும் நோயாளிகளில் குழந்தைகள் கணிசமாக இருக்கின்றனர். சிறுவர்களில் கிழக்குக் காசி குன்றுகள் (0.8%) குறைவாக உள்ள இடமாகவும் டெல்லி  (5.8%) அதிகமாக உள்ள இடமாகவும் இருக்கின்றன. சிறுமிகளில் கிழக்கு காசி குன்றுகளில் குறைவாகவும் (0.5%) ஆமதாபாத் ஊரகப் பகுதிகளில்  அதிகமாகவும் (3.4%) புற்றுநோய் காணப்படுகிறது. பெரியவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பைக் கணக்கிடும்போது லட்சத்தில் இத்தனை பேருக்கு என்று  கணக்கிடுவது வழக்கம். சிறுவர், சிறுமிகளுக்கு பத்து லட்சத்தில் இத்தனை பேருக்கு என்றுதான் கணக்கிடுவது வழக்கம். குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு  மிக குறைவாக இருக்கும் என்பதால் இந்த நடைமுறை.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz