Sunday, 13 October 2019

பற்கள், புருவங்கள், சருமத்தை அழகாக்கும் அழகு குறிப்புகள் - BEAUTY TIPS


கண்களில் உள்ள  கருவளையத்தை போக்க . இரும்பு சத்துள்ள உணவை  அதிகம் உட்கொள்ள வேண்டும் .

சருமத்தை அழகாக்கும் கரட் : ( CARROT )
நமது உடல் அழகுடன் மின்ன செய்வதில் க‌ரட் மிகவும் சிறந்த ஒன்று. அது சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் ஏற்றது. அதேப்போல் சருமத்திற்கும் அழகைத் தருகிறது.



* உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டப்பின் ஒரு க‌ரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.


* இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.

* கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.

* தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.

____________________________________

புருவங்ளை பராமரிக்க எளிய வழிகள்

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள் தான். கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும்.

அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவம் கொண்ட பெண்கள் முகம் எப்போதும் பளிச் சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமையான வழிமுறைகள் இதோ.

புருவங்களின் முடி வளர விளக்கெண்ணெய் உதவுகிறது. இதற்கு விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல்லது அரோமா எண்ணெய் சமஅளவு கலந்து புருவத்தில் தடவலாம். இது புருவங்களில் உள்ள ரோம வளர்ச்சிக்கு உதவுவதுடன் அப்பகுதியில் ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

எண்ணெய் தடவுவதற்கு முன்பாக இரண்டு, மூன்று முறை கிள்ளி விடுவது போல் அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர உதவிசெய்கிறது.

தினசரி குளிக்க செல்லும் முன்பு புருவங்கள் மேல் எண்ணெய் தடவி ஊறிய பின்பு குளிக்கலாம். இது புருவங்களை அழகு படுத்துகிறது. புருவங்களை எப்போதும் ‘திரெடிங்’ முறையில் அகற்றுவதே நல்லது. சில பெண்கள் ‘வாக்சிங்’ முறையில் புருவங்களில் உள்ள முடிகளை அகற்றுகின்றனர் இது தவறானது. இவ்வாறு செய்வதால் தசைகள் சுருங்கி தொய்ந்து போகிறது.

பிளேடு பயன்படுத்தி சிலர் புருவ முடிகளை வடிவமாக செய்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு அகற்றுபவர்களுக்கு புருவங்களில் முடி விரைவாகவும், மிகவும் திக்காகவும், தாறுமாறாகவும் முறையற்றும் வளரும்.


புருவங்களில் நரைமுடி இருப்பின் மஸ்காரா பயன்படுத்தி கருமையாக்கலாம். மஸ்காரா பிரஷ்சை காயவைத்து லேசாக நரைமுடிகளில் தடவலாம். ஐ ப்ரோ பென்சில் பயன்படுத்துவதை காட்டிலும் இதுபோன்று செய்வது அழகாவும், இயற்கையாகவும் இருக்கும்.

_____________________________

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!

பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!!
பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பணம் செலவழித்து ப்ளீச்சிங் செய்து வெள்ளையாக்குவார்கள். இப்படி செய்வதால், பற்கள் வெண்மையடையும் ஆனால் அதன் ஆரோக்கியம் குறைந்துவிடும். எனவே உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்கியமான வழிகளில் நீக்க சில எளிய இயற்கை வழிகள் உள்ளன
பேக்கிங் சோடா :-
பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.
எலுமிச்சை :-
எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
ஆப்பிள் :-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.
உப்பு :-
அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும்
சாம்பல் :-
தினமும் பற்களை துலக்கப் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் சிறிது சாம்பல் சேர்த்து, பின் பற்களை துலக்கினால், பற்களை வெண்மையாகும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், விரைவில் பற்களில் உள்ள கறைகள் அகலும்.
ஆரஞ்சு தோல் :-

இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz