Friday, 25 October 2019

மில்க் அல்வா செய்வது எப்படி?


மில்க் அல்வா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
மைதா மாவு - 30 கிராம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்.


செய்முறை :

பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும்.

அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பன்னீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பன்னீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து இறக்கவும்.

அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான மில்க் அல்வா ரெடி.

குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz