Friday, 25 October 2019

பானி பூரி செய்வது எப்படி ? பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா??

பானி பூரி செய்வது எப்படி ?  
பானி பூரி செய்வது எப்படி ?  பானி பூரி வீட்டிலேயே செய்யலாமா??
 
பானி பூரி (pani puri recipe in tamil) என்றாலே பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விரும்பி அனைவரும் சாப்பிடும், இந்த பானி பூரி செய்வது எப்படி (paani poori) அதுவும் வீட்டிலேயே ஈசியாக எப்படி செய்யலாம் என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க.

மீதமாகிய சாதத்தில் கட்லட் செய்யலாமா?

பூரிக்கு தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – ஒரு கப்
  2. ரவை – 50 கிராம்
  3. உப்பு, தண்ணீர், எண்ணெய் – தேவையான அளவு

பானி பூரி செய்வது எப்படி ? –  இந்தாங்க செய்முறை விளக்கம் (Pani Puri Recipe In Tamil) :

  • பானி பூரி (pani puri recipe in tamil) செய்வதற்கு மைதா மாவு, ரவை, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு சிறிது நேரம் கழித்து பிசைந்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி கொள்ளவும்.
  • உருட்டிய மாவை சப்பாத்தி கல்லில் போட்டு தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்த பூரியை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் பூரி தயார்.

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு தேவையானவை:

  1. உருளைக்கிழங்கு – 2
  2. சீரக தூள் – 1/2 ஸ்புன்
  3. மிளகாய் தூள் – 1 ஸ்புன்
  4. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  5. உப்பு – தேவையான அளவு

பானி பூரி (Paani Poori) மசாலா செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து, தோலை உரித்துக்கொள்ளவும்.
அதனுடன் சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.


பண்டிகை ஸ்பெஷல் – பாதாம் பூரி ரெசிபி..!

பானிக்கு தேவையானவை:

  1. புதினா 1/2 கட்டு
  2. கொத்தமல்லித் தழை 1/2 கட்டு
  3. பச்சைமிளகாய் – 4
  4. வெல்லம் 50 கிராம்
  5. புளி 50 கிராம்
  6. சீரகத் தூள் – 1/2 ஸ்புன்
  7. உப்பு மற்றும் தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பிறகு அதனுடன் வெல்லம், புதினா, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு பச்சைமிளகாய்,சீரகத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் அரைத்த அனைத்து கலவையும் இவற்றில் கலக்கவும். அவ்வளவுதான் பானி தயார்.
பூரியில் சிறிய ஓட்டை போட்டு, அதனுள் சிறிது மசாலாவை வைத்தால்அனைவருக்கும் பிடித்த பானி பூரி (pani puri recipe in tamil) தயார் இந்த சுவையான பானி பூரியை (pani puri recipe in tamil) அனைவருக்கும் பரிமாறலாம்.
பானி பூரி செய்வது எப்படி (pani puri recipe in tamil) என்று தெரிந்துகொண்டீர்களா சரி உங்கள் வீட்டில் செய்து அசத்துங்க நன்றி..!

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz