Tuesday, 29 October 2019

உங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள் !!

உங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள் !!

பெற்றோரின் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன. உங்கள் இக்கவலையை போக்க குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்
உங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்
நீங்கள் தினமும் உங்கள் குழந்தையுடன் நூற்றுக்கணக்கான வாக்கியங்களை பகிர்வீர்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் மழலைகள் மனதில் கொள்வதில்லை. உங்கள் அதிகப்படியான உணர்ச்சிகளும், கவனிப்பும், அறிவுரைகளும் குழந்தைகளை எளிதில் எரிச்சல் அடைய செய்கின்றன, அதிலும் குறிப்பாக வாலிப வயதினரை! கவலை வேண்டாம். உங்கள் இக்கவலையை போக்க சில வழிகள்...

* குழந்தையை, நீ இப்படி இருக்க வேண்டும், இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று உங்கள் விருப்பத்தை திணிக்காது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடுங்கள்.

* பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று வினவி அவர்தம் படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

* எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் அனைத்து உணவையும் குப்பையில் கொட்டுவதில்லை. ஆகையால் உணவு உண்பது குறித்து உபதேசிக்காமல், சுருக்கமாக எடுத்துரையுங்கள்.

* நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என உங்கள் கருத்தை வலியுறுத்தாது, குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு அறிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.

* நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.

* உங்கள் குழந்தைகள் ஏதேனும் குறும்பு புரிந்தாலோ, குறைவான மதிப்பெண் பெற்றாலோ அவர்களை அடிக்காது, அன்பால் அரவணையுங்கள்..!!

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz