Saturday, 5 October 2019

#உணவுபொருள்களில் கலப்படங்களை பற்றிபார்க்கலாம்..!



#உணவுபொருள்களில் கலப்படங்களை பற்றிபார்க்கலாம்..!
****************





#பகிர்ந்து_உதவுங்கள்! #Please_Share
==================================
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது.. உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை எப்படி கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? என்பதை பார்க்கலாம்.

* பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.

* சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

* ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

* மஞ்சள் தூளில், பருப்பு வகைகளில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.

* மிளகாய் தூளில் மரப்பொடி, செங்கல் பொடி, Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும். செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.

* காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள். குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.

* கொத்தமல்லி(தனியா) தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்

* கிராம்பில் அதன் எண்ணெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணெய் நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்.

#வழக்கறிஞர்பி_பாண்டியன், B.A.,B.L.,PGDFM.,PGDPT.,
உறுதிமொழி ஆணையர் - MHC
நிறுவனர் - தமிழக அறப்போர் இயக்கம்





எங்கும், எதிலும் கலப்படம், உஷார்!
=================================
ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
எப்போதாவது இதைப்பற்றி சிந்தித்தது உண்டா?
இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?...
ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
தோராயமாக இரண்டரைகிலோ  வேர்கடலை போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்....
ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.95
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....
அடுத்து பாருங்க, இரண்டரைகிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும்.
ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது...
இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது...?
இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!...
காரணம்...
இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது...
எல்லாம் கலப்படங்கள்...
எண்ணெய்களோ... தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில் தான்...
மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்) இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்...
இதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது...
இதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?...
உஷார் நண்பர்களே!...
இயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்...
இன்றைய பொருளியல் உலகில், நம் உடலியலை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்...
நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை உள்ளே அனுப்பி விட்டு, அவற்றை வெளியேற்ற அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறோம்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...
"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...
இயற்கை வேளாண்மையில் விளைந்த நல்ல உணவுகளை உண்டு
ஆரோக்கியமாக வாழ்வோம்

நன்றி: ஆரோக்கியம் & நல்வாழ்வு

மேலும்பல பயனுள்ள உடல் நல குறிப்புகளை அறிந்துகொள்ள கீழே  உள்ள தலைப்பை கிளிக் செய்யுங்கள்

1. குக்கரில் சமைப்பதைநிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் !!


23. நோய்கள் உருவாகும் மற்றும் குணமாகும் இடங்கள்..எது தெரியுமா ?

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz