Tuesday, 22 October 2019

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியது !!


ஒவ்வொரு பெண்ணும் குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது மறு ஜென்மம் எடுப்பது மாதிரி தான். முதன் முதலாக கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும். ஏற்கனவே ஒரு அனுபவம் இருப்பதால், எந்தெந்த மாதத்தில் என்னென்ன நடக்கும் என்பது தெரிந்திருக்கும்.  அதனால், உணர்ச்சி வசப்படுதல் குறைந்து இருக்கும். அதே நேரத்தில், இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். அதற்கும் முதல் கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளுக்கும் சம்பந்தமே இருக்காது.  இன்னும் சொல்லப் போனால், முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கும்.

இரண்டாவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பக்க விளைவுகள் :
1. இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும்.
முதல் கர்ப்பத்தில் கூட இவ்வளவு களைப்பு ஏற்பட்டிருக்காது. உங்கள் கணவரும், முதல் கர்ப்பத்தின் போது உங்களைக் கவனித்துக் கொண்ட மாதிரி இப்போது கவனிக்காமல் போகலாம். அதை, அடிக்கடி அவருக்கு உணர்த்திக் கொண்டே இருங்க வேண்டும். போதுமா�� அளவுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.

2. முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வரும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

3. சுருட்டு நரம்புகள், ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

4. முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சர்க்கரை எடுத்துக் கொள்வதை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

5. முதல் கர்ப்ப காலத்தில் வாந்தி ஏற்படுவதைப் போலவே, இரண்டாவது கர்ப்பத்திலும்  சகஜமாக வாந்தி ஏற்படும். ஆனால், அந்த அறிகுறிகள் வித்தியாசமாக இருக்கும். அதற்கேற்றவாறு சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz