Tuesday, 22 October 2019

எளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant

PREGNANCY TIPS

கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:
கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா?
அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:
30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?:
இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:
20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:
பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (ஃபேலோபியந் ட்யூப்) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ஒவ்யுலேஶந்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை:
எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (ஃபேலோபியந் ட்யூப்) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (ஸ்பர்ம்) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?:
உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (ஒவ்யுலேஶந்) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (ஸர்விகல் ம்யூகஸ்) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (பெல்லி க்ரம்ப்ஸ்), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (ஸ்பாடிங்க்), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4°F – 0.8°F அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (டிஜிடல் தர்மாமீடர்) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இது தவிர ஒவ்யுலேஶந் டெஸ்டிங் கிட்ஸ் போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?:
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (பாபி ஆயில்) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (லூப்ரிக்யான்ட்) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை வெஜைநல் Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz