Monday, 4 November 2019

தலைமுடியை பராமரிக்க இயற்கை வழிகள்..!

 தலைமுடியை பராமரிக்க இயற்கை வழிகள்..!

    வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும்.
    ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுழுகி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும்.
    நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும்.
    தலை முடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெயில் கலந்து தடவி வரவேண்டும்.
    
    தலை நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

    தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும்.
    நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும்.
    காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.
    நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இள நரை கருமை நிறத்திற்கு மாறும். முடியும் செழுமை பெறும்.
    முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வர, நரை நீங்கும். முளைக்கீரையை நன்கு உலர்த்திப் பொடி செய்து தினசரி அரை ஸ்பூன் சாப்பிட்டும் வரலாம். நரை விலகும்.
    இருபது செம்பருத்திப் பூக்களைப் பறித்து வந்து, காம்பை நீக்கி சுத்தம் செய்து தேவையான தேங்காய் எண்ணெயில் கசக்கிப் போட்டு, சடசடப்பு நின்றதும் இறக்கி வைத்து, ஆறிய பின் பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொண்டு தினமும் தடவி வந்தாலும் முடி செழித்து வளரும். முடி உதிர்வதும் நின்றுபோகும்.

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz