Friday, 8 November 2019

எப்போதும் இளமையாக இருக்க இந்த உணவு முறையை பின்பற்றுங்கள்.!!

 எப்போதும் இளமையாக இருக்க இந்த உணவு முறையை பின்பற்றுங்கள்.!!

தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளைச் சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இதய நோய் அபாயம் வெகுவாக குறையும். ஆயுளில் 3 ஆண்டுகளை அதிகரிக்கும் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இதயத்துக்கு ஆரோக்கியமளிக்கும் நல்ல கொழுப்பு, ஒட்டுமொத்த நலனை காக்கும் ‘செலினியம்’ ஆகியவை கொட்டை வகை உணவுகளின் சொத்து.

உங்கள் உணவில் வாரத்தில் 2 முறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணெய் மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ‘ஒமேகா 3 பேட்டி ஆசிட்’, எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.

சாப்பாடுகளுக்கு இடையே 3 மணிநேர இடைவெளி அவசியம். மூன்று பிரதான உணவுகளில் காலை உணவை முழுமையாக சாப்பிடுங்கள்.

தினசரி ஒரு கப் காபி பருகலாம். ஆரோக்கியம் காக்கிறேன் பேர்வழியென்று காபியையே துறக்க வேண்டாம். அளவாக காப்பி பருகுவது என்பது சர்க்கரை நோய், உணவுக்குழாய் கேன்சர், ஈரல் நோயிகளைத் தடுக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள ‘ஆண்டி ஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோயிகளைத் தடுக்கும், நோயித் தொற்றுக்கு எதிராக இருக்கும். முன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் காய்கறி, பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகமான நார்ச்சத்தையும், குறைவான சர்க்கரை சத்தையும் கொண்டுள்ளன.

வயதுக்கு வந்தவர்கள் தினமும் 6 கிராமுக்கு மேல் உப்பு சேர்க்க வேண்டாம். சமையல் செய்யும்போது மட்டும் உப்பு சேர்க்கவேண்டும். பிரெட், பாக்கிங் உணவு வகைகளில் அதிக உப்பு மறைந்திருக்கிறது என்பதை உணருங்கள்.

மொத்தம் 7 வகையான நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான ‘ஆண்டி ஆக்ஸ்டன்ட்களை’ கொண்டிருக்கிறன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.

தினமும் 8 கப் திரவம் குடிப்பது அவசியம். ஆனால் அது எல்லாம் தண்ணீராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டீ, காபியும் இதில் இடம்பெறலாம்.

சராசரியாக பெண்கள் 9 வகை மாவுசத்து உணவுகளை (ஆண்களுக்கு 11 வகை) சாப்பிடவேண்டும். ஒரு துண்டு ரொட்டி, முட்டை அளவு உருளைக் கிழங்கு, 28 கிராம் சாதம் போன்றவை இதில் அடங்கியிருக்கலாம்.

சாதரணமாக குளிபானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கிய காரணம். ‘டயட் ‘ குளிர்பானங்களுக்கு மாறலாம். ஜூஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.

காலை உணவும், மதிய உணவும் காலம் தாண்ட வேண்டாம். அதிகப் பசியின் போது நீங்கள் அதிகமாக சாப்பிடுவீர்கள்.

பொதுவாக பெண்கள் உணவில் 12 மில்லி கிராம் இரும்புச் சத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இரும்புச்சத்து செறிந்த உணவுகளை உங்கள் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதாரணமாக நாம் நம் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 26 கலோரி உணவு சாப்பிடலாம்.

நீங்கள் ஒருமுறை உணவை விழுங்கும்போது 15 முறை மெல்ல வேண்டும். நாம் சராசரியாக 7 முறைதான் உணவை மேல்கிறோம்.

உங்களுக்கு தினசரி 16 சதவீதபுரதம் அவசியம். அதாவது 55 கிராம். பெண்களுக்கு என்றால் 45 கிராம்.

நாம் அனைத்து விதமான சத்துக்களையும் பெற, ஒவ்வொரு 3 நாட்களுக்கும் 17 வகையான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகிறவை நல்ல ஆதாரங்கள்.

மொத்தம் 19 வகையான தாது உப்புகள், வைட்டமின்கள் அனைவருக்கும் அவசியத் தேவை என்பது மருத்துவர்களின் கருத்து.

உங்கள் தினசரி உணவில், கொழுப்பு 20 கிராம்களுக்கு அதிகமாக இருக்கக்கூடாது. உங்கள் தினசரி கலோரிகளில் 35 சதவீதத்துக்குள் தான் கொழுப்பின் பங்கு இருக்க வேண்டும்.

பால் சார்ந்த உணவு வகைகளில் 21, ஒவ்வொரு வாரமும் உங்கள் உணவுப் பட்டியலில் இருப்பது கட்டாயம். தினசரி மூன்று வகையான பால்சார்ந்த உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz