Friday, 8 November 2019

உங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா? கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உங்கள் முகம் பொலிவே இல்லாமல் இருக்கா? கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!


உடலுக்குள் நடக்கும் சில மாற்றங்களும் கூட நம்முடைய அழகைத் தீர்மானிக்கும். மாசு, மரு ஏதுமில்லாமல் சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமென்றால், நாம் உண்ணுகிற சில உணவுகளை ஓரங்கட்டியே ஆக வேண்டும். அப்படி ஓரங்கட்ட வேண்டியவைகள் என்னென்ன? இதோ….

வறுத்த உணவுகள்

சிப்ஸ், வறுத்த மீன், சிக்கன், முந்திரி போன்ற அத்தனைக்கும் கொஞ்சம்கூட இடம் தரக்கூடாது. அவற்றை அனுமதித்தால், உங்கள் சரும அழகுக்கு நோ சொல்ல வேண்டியிருக்கும்

சோடா

சோடா கலந்த பேக்கரி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த உணவுகள்

வறுத்த, பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, தோலுரிக்கப்படாத கோழி ஆகியவற்றுக்குப் பெரிய முழுக்கு போடுங்கள்

வெஜிடபிள் ஆயில்

வெஜிடபிள் ஆயில் ஆக்சிடைஷ் செய்யப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ளலாம். ஆலிவ் ஆயில் இதயத்துக்கும் நல்லது. உங்கள் சருமத்தையும் பொலிவாக்கும்.

சுத்திகரிக்கப்படாத தண்ணீர்

நம்முடைய எல்லா உணவுகளையும் விட சுத்தமான தண்ணீர் மிக அவசியம். பெரும்பாலான நோய்கள் சுத்தமில்லாத தண்ணீரால் தான் உண்டாகின்றன. நன்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது.

உப்பு

கடலில் இருந்து நேரடியாகப் பெறப்படும் உப்பில் தான் எல்லா வகையான மினரல்களும் இருக்கின்றன. அதை மட்டும் அளவாகப் பயன்படுத்துங்கள். அயோடைஸ்டு என்று கூறப்படுகிற, சுத்திகரிக்கப்பட்ட உப்பைத் தவிர்த்திடுங்கள்.

சர்க்கரை

முதலில் நீங்கள் தவிர்க்க வேண்டியது சர்க்கரையைத் தான். முடிந்தவரை 20 கிராமுக்கும் குறைவான அளவு சர்க்கரை இருக்கும்படியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது சருமத்தைப் பளபளப்பாக்குவதோடு நீரிழிவு மற்றும் உடல்பருமனையும் கட்டுப்படுத்தும்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz