Tuesday, 3 December 2019

கூந்தல் நீளமாக வளர பயனுள்ள இயற்கை குறிப்புகள்...

https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2017/6/21/original/m4.jpg
* தேங்காய் எண்ணெய்யை  வெதுவெதுப்பாக சூடேற்றி,  தலைக்கு தடவி  20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு,  அடர்த்தியாகவும் வளரும்.  குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

* கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைத் தவிர்க்கவும்.  அதற்கு மாறாக  தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.

* எலுமிச்சைச் சாற்றை  தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல்  பொடுகுகளின்றி சுத்தமாக  இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

* ஒரு வெங்காயத்தை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.  பின்பு நன்றாக நசுக்கி வெங்காயச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதை கூந்தலின் நுனியிலிருந்து நன்றாகத் தடவி  10லிருந்து 15 நிமிடம் வரை ஊறவைத்து, பின்பு லேசான ஷாம்பூ கொண்டு கழுவ வேண்டும்.  வெங்காயச் சாறு முடியின் திசுக்களில் உள்ள கொலாஜன் அளவை அதிகரித்து நீளமாக வளரச் செய்கிறது. வெங்காயச் சாறில் உள்ள சல்ஃபர் முடியை மென்மையாக்கி பளபளவென்று வைத்திருக்கும்.

* தினமும் வேப்ப எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழியும். முடிகொட்டுவது நிற்கும், முடியும் நன்றாக செழித்து வளரும். மேலும் குளிர்ச்சியினால் வரும் தலைவலி,  பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெய்யை  தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். ஆனால்,  அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது.

* முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்பட்டு, முடியின் ஆரோக்கியம் பாழாகிறது. இதனால் முடியின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. ஆகவே மாதம் ஒருமுறை முடியை லேசாக ட்ரிம் செய்ய வேண்டும். இதனால் முடியின் வலிமை அதிகரிக்கும். 

* வாரம் ஒருமுறை தவறாமல் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து,  நன்கு ஊற வைத்து குளிப்பதனால், முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

* வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.

* சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3}4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

* தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.

* உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசலாம். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

* விநிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடி பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

* தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களானது வெளியேறிவிடுவதோடு, முடி பொலிவை இழந்துவிடும். ஆகவே முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.

* முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடி வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.

* காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

* தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றுவது  அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடி  ஆரோக்கியத்தை இழந்துவிடும். 
- ரிஷி

0 comments:

Post a Comment

◄ Posting Baru Posting Lama ►
 

Copyright © 2012. template test blog - All Rights Reserved B-Seo Versi 5 by Blog Bamz